This entry is in the series 20020722_Issue

திலகபாமா,சிவகாசி


கரித்து கிடக்கும் என்
உணர்வுகளுக்கு முன்னால்
உடல்கரிப்பு எம்மாத்திரம்

காத்து கிடக்கும் நீர்
மிஞ்சியது உப்பு மட்டும்

காதல் படிகம் உட்கிடக்க
கரிப்பு ஏறாத உள்ளம்
இன்னமும் இனித்துக் கிடக்கிறது

உடல் கரிப்பு ஏறும் உன்நாவு
உள்ளத்திணிப்பை ஏற்க முடியாது தவிக்கும்

வீசிக் கிடந்த அலைகளெல்லாம்
விரித்து வைத்தவரப்புக்குள்
மோதிச் செத்து
உறையத் தொடங்கும் நீர்

வந்து போகும் சூரியன்கள்
ஆவியாக்க முடியாது தோற்றுப் போகும்
காத்திருப்புகளை காக்க வைத்து
கல்லாகும் நீர்-உப்பு
கல்லாகும் நீர் இனி கரைதல்
சாத்தியமில்லையென்று
கரித்தே சொல்லும்

***
mahend-2k@eth.net

Series Navigation