கவலையில்…
மணிமலர் ரமேஷ்

மண்ணெண்னை லாரியை
ஓட்டி வரும் கவலையில்
இடுங்கிய கண்களால் சிரிக்கும்
சீனத்தாத்தாவின் சிரிப்பு
ஏனோ
தாய்நாட்டில் பிரிந்து வளரும்
பிரிய மகளின் புன்னகையை
நினைவெழுப்பியது
ஆறுதலாய்
நெற்றியில் முத்தம் பதித்து
அரவணைப்பாய்
தூங்க வைக்க இயலுமோ
இப் பெரியவரை என்னால்… ?
எதையுமே நினைவுறுத்தா
எல்லாக் குழந்தைகளுக்கும்
தருவதற்கு வாய்க்குமோ
என்னிடம் எதுவும்.
***
subramesh@hotmail.com