தாழ் படுக்கைகள்
நிஷாந்தன்

இருப்புப் பாதை வண்டியின்
தாழ் படுக்கைகள்
எப்போதுமே வசீகரமானவை
சன்னலோரத்தின் காற்றுக்காகவும்
சில சமயங்களில் காட்சிக்காகவும்.
பெரும்பாலும் அவை
சினேகம் கொண்டிருப்பது
இயலாதவர்களுடன் தான்.
எப்போதாவது தாழ் படுக்கைகள்
இளைஞர்களுக்கு ஒதுக்கப்பட்டால்
அவை நிரப்பப்படும்
முதலில் இரக்கத்தாலும்
பிறகு
முதியவர்களாலும்.
– நிஷாந்தன்
poet.nishanthan@gmail.com