This entry is in the series 20101114_Issue

ரசிகன்


ஒரு பார்வையின் கவனத்தை
திசை திருப்புதலை விட
வேறொன்றும் பெரியதாய் இல்லை….
அவளை சொல்ல!

ஒரு குழந்தையின்
புன்சிரிப்பை காட்டிலும்
அழகாய் பூத்திருந்தது
அவள் புன்னகை..

பெண்ணினத்தின்
மெல்லிய பொறாமையை விட
சிவப்பு பட்டிருக்கும்
அவள் இதழ்களின் வண்ணப்பூச்சு…

எப்போதேனும் சீறிப்பாயும்
வால் நட்சத்திரத்தை விட
கொஞ்சம்
நிதானமாய் அவசரப்படும்
அவள் காதோர மயிறிழைகள்!

எஞ்சியவை
வெட்கம் கொள்ள…
எனக்கும் கொஞ்சம் வெட்கம் தான்
அவைகளை எடுத்துச் சொல்ல…

ஹ்ம்ம்….
இவளை நிலா என்றோ
பட்டாம்பூச்சி என்றோ
அன்னியப்படுத்துதலை விட

என் காதலுக்கினிய
காதலி என
அறிமுகப்படுத்துதல் சிறப்பு!

வேறொன்றும் பெரிதாய் இல்லை
அவளை சொல்ல..
வெறும் அழகி எனலாம்…
போதுமானது!

-ரசிகன்

Series Navigation