This entry is in the series 20101114_Issue

அப்ராஜிதன்


கனவுகளிலிருந்து விடுபட நினைக்கும்
அடுத்த நொடியே
என் குரல்வளையை கவ்வி பிடிக்கிறது
கடவுளர்களின் சாபம்
நடுங்கவைத்து வேடிக்கைக்காட்டி
என்னை இழுத்துசென்று
மீளமுடியா கனவுகளில் மீண்டும் புதைத்துவிடுகிறது…..
அங்கே விரும்பி அழிவதைத்தவிர
வேறு வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை
மதுகோப்பையில் சருகைப்போல் மிதக்கிறேன்
உடலின் வேட்கைத்தீர வேசிகளின் மத்தியில்
புரண்டு கிடக்கிறேன்
கணக்கில்லா கொலைகள்
காட்டிகொடுப்புகள்
துரோகங்கள்
பழிவாங்கல்கள்
துதிபாடல்கள்
வன்புணர்வுகள்
மீண்டும் மீண்டும்
மீண்டும்
மீண்டும்
மீண்டும்
மீண்டும்
மீண்டும்
மீண்டும்
அதே
அதே
அதே
அதே
அதே
மீளமுடியா
அதே கனவுகள்
எவ்வித கருணையும் இல்லாத
அதே கடவுளர்கள்…………………..

Series Navigation