கல்லறைப் பூக்கள்
ஷம்மி முத்துவேல்

மாமிசச் சிதிலங்களைப்
புழுவரிப்பதையொத்த
உடலுண்ணும் பட்சினிகள்
அகோர நிழல்களின்
பிரதிபலிப்புகள் ஆங்காங்கே
உயிரற்ற சடலத்திடம் கூட
தேடல்கள்
நிலை மாறும் செடி போல்
மரணவீச்சு
உறக்கமற்று, சலனமற்று
தனக்கான சவக்குழியைத்
தோண்டிக் கொள்கிறது
இன்றுதிர்ந்த பூவொன்று
–ஷம்மி முத்துவேல்