பொய்யான பதில்கள்
Published October 17, 2010 • By
கலாசுரன்
கலாசுரன்
——————————————–
என் சிந்தனைகளே
நீங்கள்
இதற்குமுன்
யாருடையதாக இருந்தீர்கள்…?
அவர்களை
அல்லது
அந்த நபரை
என்னிடம் அறிமுகப்படுத்தாததின்
காரணம் சொல்லுங்கள் …
பொய்யான பதில்களை
உங்களிடமிருந்து
எதிர்பார்க்கிறேன் …
ஏனனில்
உங்கள் தூண்டுதலில்
நான் சொன்ன பொய்களின்
சுவை
இன்னும் எனது நாக்கில்
புரண்டபடி இருக்கிறது …
————————————————
கலாசுரன்..