This entry is in the series 20100807_Issue

கலாசுரன்


—————————————————
உச்சிவெயில் காயட்டும்
சிந்தனைகள் பிளவுண்டு போகும் வரை
ஒளியின்……….. சலனங்கள் கூட
அறியாத சாய்தல்
சில விருப்பங்களையும்
சாயச் செயிதுவிடும்…!
இருப்பினும்
இறுதி மூச்சிழுத்துவிட்டு
மூக்கில் பஞ்சு திருகி…
படுத்துக்கொள்கிறான்
தனக்கான சொத்தென
நெற்றிப்பொட்டில்
ஒற்றை ரூபாய் நாணயம் ….!
அதும் தன் உழைப்பில்
உருவாக்கப்படாதது
நிரந்தரமாய் மூடிக்கொண்ட கண்களில்
எவருக்கும் தெரியாமல் மறைந்து போன
கண்ணீரின் சிந்தனைகள் சிரிக்கின்றன
பார்த்து நிற்கும்
உனக்கும் ஒருநாள் கிடைக்கும்
இன்னொருவரின் உழைப்பில்
ஒரு ஒற்றை ரூபாய் நாணயம் …..
சோகத்தின் கிருமிகள் அண்டாத பஞ்சு
தேடி வைத்துக்கொள்…..!
நெருப்பிலேனும் மண்ணிலேனும்
நிம்மதியாய் இறுதி மூச்சிழுத்து
தூங்கும்படிக்கு….!
இது சாயங்காலம் ….!
—————————————————-
கலாசுரன்

Series Navigation