ஒரு பூவும் சில பூக்களும்
இலெ.அ. விஜயபாரதி
நிழல்
மதி தொலையும்
அதிகாலையில்
இரவி தொலையும்
அந்திமாலையில்
நிழல் தொலைத்திருக்கும்…
இவ்வுலகம்!
ஒரு பூவும் சில பூக்களும்
காதலின் காதோரத்தில்
கவிதை பாடிக்கொண்டிருந்தது
ஒற்றை ரோஜா!
கட்டிலின் கால்களில்
மிதிபட்டு கிடந்ததோ
மல்லிகை பூக்கள்!!
– இலெ.அ. விஜயபாரதி