This entry is in the series 20110320_Issue

ச. மணி ராமலிங்கம்



எதிர்பார்ப்பின்
எதுகைகளாக
பயணிக்கிறோம்
மழை தேடும் நீயும்
உன்னை தேடும் நானும்….

உன்னை சேர்ந்தால்
மோட்சம் பெறுவேன் நான்…

நீ மழையை சேர்ந்தால்
மோட்சம் பெறும் மழை..

முக்கோண காத்திருப்பில்
மூன்று புள்ளிகளாய்
மையம் கொள்கிறோம்
நீ… நான்…. மழை….

————————————————
ச. மணி ராமலிங்கம்

Series Navigation