ஒற்றைப் பேனாவின் மை
ராமலக்ஷ்மி
–
பேரொளியொன்று
வானில் தோன்ற
பிரபஞ்சமெங்கும் சிந்தியததன் மிச்சமாய்
எண்ணற்ற நட்சத்திரங்கள்
ஓரொளியிலிருந்து
வந்த மூலம் அறியாமல்
யார் உயர்வென்று
எங்கெங்கினும் போர்க்களங்கள்
மோதியது போதுமென்று
வாதிட்டு அலுத்துப் போய்
செய்வதறியாது கோள்கள்
உலுக்கக் காத்திருக்கிறது உலகை
ஒற்றை பேனாவின் மை
வ்டிக்கப் போகும் தீர்ப்புகள்
வெட்கப்பட்டு உதித்து
வேதனையுடன் மறைகின்றார்
நித்தம் சூரியசந்திரர்கள்
அவருள் ஒரேசக்தியாய் ஒளிர்கின்றார்
அத்தனை கடவுளரும்..
இப்புரிதலின்றி புவியெங்கும் பாமரர்கள்!
ramalakshmi_rajan@yahoo.co.in