This entry is in the series 20100905_Issue

கலாசுரன்


——————————————————————–
சிவப்பு வெயில் கசியும்
ஒரு மாலை வேளையில்
எவருக்கும் புரிந்துகொள்ளமுடியாமல்
சாலையோரமாய்
ஒரு மனிதனின்
சிந்தனைகள்
இறந்துகொண்டிருந்தது

அச்சிந்தனைகளுடன்
அவனும்
இறந்துகொண்டிருப்பதாக…..!
அவனது
மண்டையோட்டில்
அழுத்தமாய் எழுதிவைத்தபின்….
இருள் சூழ்ந்ததும்
அருகாமையில்
அவனுக்காக
ஆறடியிலான
குழி ஒன்றை
தோண்டி வைத்து

சூழ்ந்த இருளில்
ஆங்காங்கே சென்று நின்று
காலம் வயிறு குலுங்க
சிரித்துக்கொண்டே இருந்தது.

——————————————————-

Series Navigation