ஒரு கவிதை உருவாகிறாள்
Published January 30, 2011 • By
தேனு
தேனு

எண்ணச் சிதறல்
தலைவிரி கோலத்தோடு
நிர்வாண வார்த்தைகள்
.
தொடுக்கப்பட்டு
வெட்கத்தால் இழுபடுகிறது
கோர்வை!!!
சிக்கல் கலைத்து
பின்னி எடுக்கையில்
அரங்கேற்றத்திற்கு ஆயத்தம்
எந்தன் கவிதை காதலி….
அதர ரேகைகள் தெறித்து
ஒரு வசீகரப் புன்னகை
விடுபட
நிசப்தத்துடன் விடுதலை….
இருட்டறையில் அடைபட்டிருந்த
கற்பனை கருக்கள்!!
– தேனு