This entry is in the series 20110130_Issue

ஜெயானந்தன்


.,
—————–
என் மன்னவனே !
என் பிரபுவே !
என் மந்திரியே !
மண்டியிட்டு அழுகின்றேன்,
ஏன் இப்படி செய்தீர் ?
எங்கே தொலைந்தது
வாழ்வின் ஜீவீதம்..,
எங்கே தொலைந்தது
ஆன்மாவின் உண்மை !
இனி வாழ்வதற்கு ..
எங்கே ஒளி இருக்கின்றது.
சூரிய கதிர்களின்
ரம்மியங்களை விழுங்க
நிலமகள் நாணுகின்றாள்.
மண்னின் ஜிவராசிகள்
டின்ஏ மாறிவிட்டது.
மௌனங்களின் வாசலில்
வயலின் கழுத்து முறிந்து விட்டது.
பச்சை கதிர்களின் கர்பங்கள்
கலப்படமாகி கலைந்துவிட்டது.
கனமழை கொடையில்
அமிலமே கொட்டியது.
கடைசி மனிதனின் வருக்கைக்காக
காத்து நிற்கின்றேன் – இன்னமும்
நம்பிக்யோடு …!
————.

Series Navigation