ஸ்பரிசம்
ஷம்மி முத்துவேல்

வெளிர் மேகம் சற்றுக் கருமை பூசியதும்
தட்டாம் பூச்சிகள் வட்டமிட்டன …
முதல் துளி ஸ்பரிசம்
உள்வாங்கிய பூமியும்
இசைக்க மறந்த பாடல்களுமாய்
கொஞ்சம் சிலிர்க்க …
உயிர்ப்பை தொலைத்திருந்த
விதை ஒன்றும் துளிர் விட்டது ..
முதல் அரும்பு வெளிவர
காதல் மழை அதை நனைத்தது