This entry is in the series 20110213_Issue

இளங்கோ


பயணம்..
*
நீ
உடைந்து போ
என்று குவிந்த நதியின் நீர்க்குமிழ்
கொஞ்சம்
சுமந்து போகிறது
கரையோர வனத்தின் காற்றை..

*****

சள்ளடைச் செதில்கள்
*
இன்னொரு முறை வாய்ப்பதில்லை
இந்தப் பாடல்

எழுதும்படி சொல்லிப் போயிற்று காற்று

கறையான்களின் இரவுகள் அரித்துவிட்ட
நினைவின் குறிப்புகள்
சள்ளடைச் செதில்களில்
வழிந்தோடுகிறது
மௌனக் குருதியை இழுத்துக் கொண்டு

ரீங்கார முனைப்புகளில்
பிடிப்பட மறுத்து
துகள்களென சிதறும் பாடல்

இன்னொருமுறை வாய்ப்பதில்லை
எழுதுவதற்கு தோதாக..

*****

Series Navigation