கடல் உள்ளும் வெளியேயும்..
தேனம்மை லஷ்மணன்
********************************************
கடற்கரையோரம்
செல்லும் போதெல்லாம்
சுனாமியும்
சர்வதேச எல்லையுமே
நினைவை உறுத்தி..
காற்று வாங்க நினைத்து
காற்றோடு கலந்த
மூச்சையெல்லாம் உணர்ந்து
சங்கு., சிப்பி., மணல் குத்த
அலைச் சத்தம் துரத்த
செயலற்ற பாதசாரியாய்
தடுமாறி திரும்பி ஓடினேன்
வீட்டுக் காற்றை சுவாசிக்க..