குறும்பாக்கள் ஐந்து
பட்டி சு.செங்குட்டுவன்
—============
1.ஒற்றைப் பனைமரம்
ஒதுங்க நிழலில்லை
மட்டையில் கூடுகள்.
2.மொட்டைத் தலையில்
முடிவளர ரத்தம்
பனி குடித்த முயல்.
3.மந்திரி ஆகிட
பயிற்சி எடுக்கிறது
வேலியில் ஓணான்.
4.நாளைக்கு வரும்
நாளைக்கு வரும்
அஞ்சலில் வேலை.
5.எத்தனை ஆயிரம் சைக்கிள்கள
எப்படி வருவார்கள்
பஸ்ஸில் கருகிய மாணவிகள்.
v.sabanayagam@gmail.com