This entry is in the series 20110109_Issue

சபீர்


நீ
வாங்கித் தந்த
விடிகாலையும்…
உனக்காக
விற்றுத் தீர்த்த
அந்தி மாலையும்
மட்டு மல்லாது…
நடுநிசியும் நன்பகலும்
முன்னிரவும் முதிர்காலையும்
என-
எக்காலமும்
உன் நினைவுகள்!

உன்
கனிந்த
கன்னங்கள்
கவிதை பாடின,
அதில்
குவிந்த
எண்ணங்கள்
எதையோ நாடின!

நீயோ…
கிடைத்தும் கிடைக்காமல்
உண்டும் செரிக்காமல்
இரத்ததோடு
கலக்காத குளுக்கோஸாய்
என் சர்வமும்
வியாபிக்கிறாய்!

நானோ…
இனிப்பின்மேலான
இச்சையோடு
நீரிழிவுக்காரனைப் போல…!

Series Navigation