அந்த முத்துக்களை
செண்பக ஜெகதீசன்
முத்துமுத்தாய் வியர்வைத்துளிகள்..
மூட்டை தூக்கும் தெழிலாளி
முதுகிலேதான்,
அவன்
கண்ணீரைத் துடைக்க வராத
கரங்களா
வரப்போகின்றன
வியர்வையைத் துடைத்திட !
மனிதன் மறந்த உதவியை
அடுத்த
மூட்டை செய்கிறது-
முதுகு வியர்வையை
முடிந்தவரைத் துடைக்கிறது
மூட்டை !
செண்பக ஜெகதீசன்