வாழ்வு
Published January 23, 2011 • By
உழவன்
உழவன்

கரிசல்காரன் அண்ணாந்து பார்த்து மகிழ்கிறான்.
நீலமெல்லாம் மறைந்து
எங்கும் திட்டுத்திட்டாய்க் கருப்பு.
வெளியெங்கும் இருள் பரவ
பாறைகள் உருண்டு மோதுகின்றன.
இலையின் நரம்புகளாய் மின்னல்கள் மின்ன
அதீத தாகத்திலிருக்கும்
வாய்பிளந்த கரும்பூமி
தன் நாவை நீட்டிக் காத்திருக்கிறது.
எறும்புகள் சேமிப்புக்கிடங்கின்
இருப்பைக் கணக்கிடுகின்றன.
திடீரென எங்கிருந்தோ வந்த பெருங்காற்றொன்று
கையோடு கருந்திட்டுக்களை அள்ளிச்செல்கிறது
கோழிக்குஞ்சொன்றைத் தூக்கிச் செல்லும்
பருந்து போல.