அகோரி

This entry is part [part not set] of 33 in the series 20100815_Issue

ப.மதியழகன்,



விதி செய்து வைத்தவன்
சதி செய்து விட்டான்
தரிசு நிலத்தில் விதை முளைவிட
அருள் செய்து விட்டான்
தாந்தோன்றியானவன்
திருவோடு தொலைத்துவிட்டான்
ஊர் செய்யும்
நையாண்டியை பொறுக்காமல்
வித்தையை காட்டிட துணிந்துவிட்டான்
கரிய நிற நாயோடு பைரவராய்
ஒவ்வொரு இரவும்
ஊர் சுற்றி விட்டான்
திருநீலகண்டனாய்
விஷம் உண்டு விட்டான்
நாயன்மார்களை விட்டுவைக்காமல்
அவர்களது வாழ்வில்
அளவுக்கு மீறி விளையாடிவிட்டான்
லீலைகளை செய்வதையே
தனது தொழிலாக கொண்டுவிட்டான்
யாருக்கும் அகப்படாதவன்
பராரியின் கனவில் தோன்றிவிட்டான்
சமூகத்தைவிட்டு ஒதுங்கி
அகத் தேடலையே தொழிலாக
கொண்டு விட்டான்
அவனொருவன் மட்டிலும்
அகம் பிரம்மாஸ்மி என
உணர்ந்து கொண்டு விட்டான்
உமையவளை என்றென்றுமாய்
குமரிமுனையில் காக்க வைத்துவிட்டான்
ஐம்புலன்களை அடக்கி ஒடுக்கி
அதன் மூலம் உலகாண்டு விட்டான்.

ப.மதியழகன்,

mathi2134@gmail.com

Series Navigation