சுழல்
ஷம்மி முத்துவேல்

மகிழ்ச்சியின் சாயலில்
சுழித்தோடியதோர்
மின்னல் கீற்று
மூடி வைத்து அடைகாத்து
பக்குவப்பட்ட ஆழத்தில்
பதுக்கிவைக்கப்பட்டது
ஆற்றங்கரையுள்
காலங்கள் உருண்டோடிட
மருண்டது
உள் அடக்கப்பட்ட உணர்வின் சாயல்
துணை தேடியலைய
இழுத்துச் சென்றது
என்னைத் தன்னுள்
வெகுதூரம் சென்றபின்
குற்றமுணர்ந்து விடுவித்தது
மிதந்தது ஓர் சடலம்
காற்றுக் குமிழிகள் மேல் இழுத்து வர