சுவர் சாய்ந்த நிழல்கள் …!
Published November 7, 2010 • By
கலாசுரன்
கலாசுரன்
———————————————–
உன் கல்லறை
சுவர் சாய்ந்த நிழலும்
உடன் வர மறுத்தபின்…..!
ஒரு பனிச்சுடரில்
சுட்டெரித்த
ஞாபகங்களை
தீ மழையில் நனைத்து
ஆழ்கடலில் உலர்த்துகிறது …!
மீண்டும் நாமிருவரும்
சந்திக்கக்கூடும்
என்றே எண்ணங்கள்
சந்திப்பிற்கான
வாசலில் காத்திருக்கின்றன …!
கலை அணிந்த நீ
மனதில் கவிபடைத்துச்
சென்ற நாளன்று …
கடலை உப்பாக்கிய
விழிநீர் முத்துக்கள்
கண்ணீர்க் கடலில் தான்
மீண்டும்
கரைந்து விடுகின்றன …
அச்சுவரின் மேடுபள்ளங்களின்
வெளிப்பரப்பில்
வடிவங்களுக்கேர்ப்ப
வளைந்து நெளிந்த
நிழலாய்
சில ஞாபகங்கள்
பூசப்பட்டிருக்கின்றன
துன்பியலின்
ஓவியங்களாக…!