This entry is in the series 20110327_Issue

ச. மணி ராமலிங்கம்



சுவர் ஆணியில்
தொங்கவிடப்பட்ட
சட்டையிலும்

மெத்தை மேல்
உறங்கி கொண்டு
இருக்கும் தலையணையின்
மேல் உறையிலும்

கடைசியாக எழுதப்பட்ட
உறவினரின் விலாசம்
அடங்கிய பதிவு ஏடுவிலும்

இருக்கையின்
கை பகுதியிலும்
சாய் நாற்காலியின்
தலை பகுதியிலும்

அப்பாவின் சுவாசம்
மறைந்த பின்பும்….
அவரின் வாசம்
எஞ்சி இருந்தது…

Series Navigation