This entry is in the series 20101227_Issue

கலாசுரன்



சலனமற்ற பார்வையின் முனையில்
தொங்கியபடி
உருமாறும் நிகழ்வுகள் …

அவை
தன் ஒவ்வொரு உருவங்களிலும்
புது விதமான
மொழிகளைக் கையாளுகின்றது

பிரம்மிப்பான
வேடிக்கையோடு
பார்த்துக்கொண்டிருக்க

மேசையில் சிந்திய
தேநீரின் விரல் நீண்டு
என் கையை தொட்டழைத்ததும்
அந்த நிகழ்வுகள் துகள்களாகச் திதறின

அதன்
இன்னொரு விரலை
எறும்புகள்
மொய்த்துக்கொண்டிருக்கிறது

மூன்றாம் விரல்
மேசையின் விளிம்பைத்
தொட்டுப் பொதிந்த நுனி
தரையில் மோதி நொறுங்கியது

அது மோதும்
தரையிலும் படர்கின்றன
கையற்ற புது விரல்கள்
ஒரு நிகழ்வின் பிம்பங்களோடு …

அருகாமையில்
அந்தத் தேநீர்க்குவளை
என்னைப் பார்த்தபடி
வாய் பிளந்து
சிரித்துக்கொண்டிருந்தது ….

கலாசுரன்…

Series Navigation