மகரந்தங்களில் தேனுண்ணும் வண்டுகள்
Published December 27, 2010 • By
ராம்ப்ரசாத்

வாசங்களின் அஸ்திவாரங்களில்
பூக்கப் பழகிவிட்டு
அவைகளுக்கு அஸ்திவாரங்களின்றிப்
பூக்கத்தெரிவதே இல்லை…
அஸ்திவாரங்களின் உதவியின்றி
வேரூன்றுவதை பற்றிய
வண்டுகளின் கேள்விகளை
பதில்களின்றி புறக்கணிக்கின்றன…
வாசங்களுக்காகவே மகரந்தங்களை
வளர்க்க முனைகின்றன
பூக்கள்…
மகரந்தங்களில் தேனுண்ணும்
வாய்ப்புகளை வண்டுகள் கேள்விகளில்
இழக்க விரும்புவதில்லை…
– ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)