இயலும்

This entry is part [part not set] of 37 in the series 20110306_Issue

தி .ராஜேஷ் .அலங்கரிகின்ற
தன் ஆணவத்தின்
மிதமிஞ்சிய அறியாமையை
குறிப்பெடுப்பதால்
மேலும் ஒரு கிரீடம்
உங்களால் சூட்டப்படுகிறது .

இதன் கணமேற்றும்
பார்வையை மேலும்
கூர்மையாக்குகின்ற
செயலாக்கம் உங்களால்
நிறுவப்படுகிறது .

நடந்தேறும்
ஒரு முடிவனை
இப்பொழுது உங்களால்
ஏற்றுகொள்ளப்பட்டிருக்கும் .
தன் சுய ஒளியின்
நிரபிரிகைகள்
கவனச்சிதறலாகிறது.

சினத்தின் அச்சம்
உள்ளார்ந்த நெறியாகி
நிலைத்திருப்பதை
உங்களால்
இனி வேடிக்கையாக
மட்டுமே பார்க்க
இயலும்.

Series Navigation

தி .ராஜேஷ்

தி .ராஜேஷ்