என் அன்பிற்குரிய!
Published February 20, 2011 • By
ரசிகன்
ரசிகன்

வெள்ளோட்டமாய்
தொடங்கிய தனிமை…
எவ்வுயிர்கள் குழுமியிருப்பினும்
நாற்சுவர்களுக்குள்
அடைபட்டிருந்த ஒரு உலகம்!
விட்டம் அதன் வானம்..
மௌனம் அதன் காற்று..
தனிமை அதன் மக்கள்!
பரபரப்புகள் அற்ற
நினைவுகள்
என் அன்பிற்குரிய
இவ்வுலகத்தின் பிரதிவாதிகள்!
வந்த எல்லோருக்கும்
ஆளுக்கொரு கோப்பையென
பகிர்ந்தளித்து விட்டேன்…
சூடு தணிவதற்குள்
பருகியாக வேண்டும்
தேநீரை!
– ரசிகன்