This entry is in the series 20101205_Issue

வே பிச்சுமணி


என் வாய் உதிர்த்த வார்த்தைகளை
என் காதுகள் நம்ப மறுத்தன
வார்த்தைகளின் தாக்கத்தால்
உடலில் உறார்மோன்கள் சுரக்கின்றன
அவை
தம்மை நிர்வாணப்படுத்தி விடுமோ என
வார்த்தைகள் அஞ்சி
மனதிடம் முறையிட்டது
மனது ஆயிரம் சமாதானம் சொன்ன போதிலும்
என் வார்த்தைகளை
என் காது நம்ப மறுத்தன
அடிமனது வார்த்தைகளின்
புனைவை காதுகளுக்கு காட்டிகொடுக்க
பயந்து போன வார்த்தைகள்
என் வாயில் இருந்து கீழே குதித்து
தன்னை எப்பொழுதும் நம்பும்
பல கோடி காதுகளை சென்றடைந்தது
என் வாய்
என் காதுகளை பார்த்து
நக்கலாக சிரித்து கொண்டு இருக்கிறது

Series Navigation