இதமானதொரு நகைப்பு …!
Published November 21, 2010 • By
கலாசுரன்
கலாசுரன்
—————————————————
அறை திறக்கப்பட்டது
உடன் வந்தவர்கள்
விடைபெற்றுச் சென்றார்கள்
அங்கு பத்திரமாக்கப்பட்டிருந்தது
ஒரு பேனாவும்
சில காகிதங்களும்
ஊன்றி நடப்பதற்கான ஒரு தடியும்
இறுதியில் இதமானதொரு நகைப்பு
அவன் இதழ்களில் மிச்சப்பட்டிருந்தது ….
யாரும் அவனை தனியாக விட்டுச்
செல்லவில்லை என்பதாக…!!
—————————————————————
கலாசுரன்.