தன்னிலை
சின்னப்பயல்

யாரிடமும்முகம்கொடுத்து
பேசத்தோன்றாது
சதாதனக்குள்ளேயே
யோசித்துக்கொண்டிருக்கத்தோன்றும்
தலைவிரிகோலமாகஅலைவதை
கண்டுசொன்னாலும்கவனிக்கத்தோன்றாது
தமக்குத்தாமேசிரித்துக்கொள்வதையும்
பின்அழுவதையும்கட்டுப்படுத்தஇயலாது
சிலசமயம்தனிமையேசுகம்என்று
ஒதுங்கிக்கிடக்கவும்தோன்றும்.
பல்துலக்கச்சென்றால்பலமணிநேரம்
ஆவதைகவனிக்கத்தோன்றாது
என்னிலைகண்டு
இலைஅடித்தால்சரியாகுமா
எனஉறவினரும்நினைக்கத்தோன்றும்.
இவையெல்லாம்
ஒருகவிதைஎழுதநினைத்தபோது
நேர்ந்தகதி……
யாரைப்பற்றிஎனமட்டும்
கேட்காதீர்கள்..!