மேலாடை
ராம்ப்ரசாத்

வியர்க்க வியர்க்க
ஓடிவந்து துவண்டு
கிடக்கிறது அந்த மேலாடை…
அழுக்கில் நாள்முழுதும் குளித்துவிட்டு
நீரால் துவட்டிக்கொள்ளும்…
துவட்டலின் பின்
உடல் முறுக்கியொரு தேகப்பயிற்சியும்
அதற்க்குப்பிறகொரு
சூரியக்குளியலும் அத்தியாவசியமாய்…
அதன்பின் அது
அதன் தோழியை கட்டிப்பிடித்து
உறங்கச் செல்லலாம்
அல்லது மீண்டும் ஓட்டமெடுக்கலாம்…
இப்போதைக்கு ஒரு
கவிதையாகிக் கிடக்கட்டும்…
– ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)