This entry is in the series 20090604_Issue

சத்திதாசன்


பச்சைப் பசேலெனும்
பசும் புற்தரையினில்
பொன்னொளி பூத்தது
போலொரு பனித்துளி
மின்னுது நுனியில்

உள்ளத்தின் விசாலம்
உருவத்தில் இல்லை
உண்மை அதனை
உணர்த்திடும் பனித்துளி

சின்னஞ்சிறிய பனித்துளியினுள்
அழகாய்த் தெரியுது
ஆலமரத்தின் அழகிய வடிவம்
அறியும் உள்ளம் வாழ்வின் உண்மை

இயற்கையின் வனைப்பில்
இத்தனை படிப்பினை
இருப்பதை அறியாமல்
இறுமாப்புக் கொள்வது சரியோ

இதயம் விரித்து அன்பைப்
பொழிந்து இன்பம் காண
செல்வம் வேண்டாம்
இளகிய மனமே போதும்


http://www.thamilpoonga.com

Series Navigation