தமிழவன் கவிதைகள்-பதின்மூன்று
Published July 8, 2004 • By
தமிழவன்
தமிழவன்

நேற்று அறைக்குள் நுழைகையில்
எதிர்பாராத விதமாய் மண்டைஓடு கொண்டுவந்தார்
நண்பர்.
கவிதை எழுதும் காலமல்ல இது
என்றார்.
தனக்கு அடிக்கடி குனிந்து காலணிக்கு
லேசு கட்டுபவர்களைப் பிடிக்காது
சளிகட்டாமல் இருமுபவர்களையும் சேர்த்து
என்றார்.
தேவையின்றித் திரும்பிப் பார்ப்பவர்களைப்
பற்றிக் கேட்டேன்.
சற்றுத் தயங்கினார்.
துக்க காலம் என்பதால் கறுப்பு ஆடையில்
எல்லாத் தெருவிலும் போனார்கள் சிலுவைகளுடன்
இறுதியில் ஒருவன் நொண்டியபடி.
கேட்பதற்கெல்லாம் பதில் வைத்திருக்கிறார்கள்
சிலர்
என்று எழுதும் போது இக்கவிதை முடிகிறது.
—-
carlossa253@hotmail.com