அப்பா – ஆலமரம்
மோசி பாலன்

—-
மண்ணூன்றி மரமாய் நின்றுவிட்டேன்.
எனக்கென்று வேரும் நீரும்
கிளைகளும் இலைகளும்
பழந்தின்னும் பறவைகளும்—
ஆலமரமாய் அப்பா நாம் ஒட்டியிருந்தாலும் –
எனக்குத்தெரியும் உன்னாலாகமுடியாது
உன் கிளையில் விழுதாய் ஊஞ்சலாடிய நானாக.
—-
மோசி பாலன் (bala_siva@yahoo.com)