வேடத்தைக் கிழிப்போம்-5 (தொடர் கவிதை)
பனசை நடராஜன்

மார்க்கத்தைக் காப்பதாகச்
சொல்லிக் கொண்டு
அப்பாவி மக்களை
எதிரெதிரே மோதவிட்டு
உதிரம் குடிக்கும் ஓநாய்களாய்
மதவாத வேடதாரிகள்!
இதையறியாமல் நமக்குள்ளே
அடித்துக் கொண்டு
அழியும், செம்மறி
ஆடுகளாய் நாம்!!
இவர்களுக்கு..
‘ஏன் ? ‘ என்று
கேள்விக் கேட்கும்
அறிவுடையோர் கண்டால்
ஆகாது..
அடிவருடும்,..
ஆணைக்கு அடிபணியும்..,
ஆண்டவன் பெயராலே
கொலை புரியும்..,
அறிவு ஊனமாகப் பிறந்த
அடிமைகள்தான் வேண்டும்!!
(தொடரும்)
-பனசை நடராஜன், சிங்கப்பூர் –
(feenix75@yaaho.co.in)