கிரிஸ்துவ அடிப்படைவாதியின் பத்து அடையாளங்கள்

This entry is part [part not set] of 61 in the series 20040805_Issue

வலையிலிருந்து


10. மற்ற மதங்கள் கற்பிக்கும் ஆயிரமாயிரம் கடவுள்கள் இல்லை என்பீர்கள், ஆனால் உங்கள் கடவுளை மற்றவர்கள் மறுக்க முற்பட்டால் நீங்கள் கோபத்தில் கொதித்தெழுவீர்கள்.

9. மனிதன் மற்ற உயிரினங்களிலிருந்து தோன்றினான் என்பதை ஒப்புக் கொள்வது இழிவானது, மனிதத்திற்கு ஏற்றதல்ல என்பீர்கள், ஆனால் விவிலியம் மனிதனை கடவுள் மண்ணிலிருந்து படைத்தார் என்று சொல்வதை பிரசினை ஏதும் இன்றி ஏற்றுக் கொள்வீர்கள்.

8. பலகடவுளரை வழிபடுபவரைப் பார்த்து சிரிப்பீர்கள், ஆனால் முக்கடவுளை(Triune) ஒப்புக் கொள்வதில் உங்களுக்குப் பிரசினை ஏதும் இல்லை.

7. மற்ற மதத்தினரின் அட்டூழியத்தினால் உன் முகம் சிவக்கக் கோபப்படுவீர்கள், ஆனால் கடவுள்/ஜெஹோவா எகிப்தின் எல்லாக் குழந்தைகளையும் கொன்றதையும், மற்ற பூர்வகுடிகளை பெண்கள் , குழந்தைகள், மரங்களைக் கூட அழித்ததைப் படித்து உங்களுக்கு எந்த உணர்ச்சியும் ஏற்படாது.

6. மனிதர்களைக் கடவுளாராய்க் கும்பிடும் இந்து நம்பிக்கைகளையும்,கடவுளர்கள் பெண்களுடன் குடித்தனம் செய்யும் கிரேக்க நம்பிக்கைகளையும் பார்த்து சிரிக்கும் நீங்கள், மேரியின் கன்னித்தாய் கதையையும், மேரிக்குப் பிறந்த குழந்தை கொல்லப்பட்டு உயிர்த்து எழுந்து கதையையும், உயிர்த்தெழுந்து சொர்க்கம் புகுந்த கதையையும் நம்பத் தயாராய் இருக்கிறீர்கள்.

5. உலகத்தின் வயதை(சில பில்லியன் வருடங்கள்) கணக்க்கிடும் விஞ்ஞானபூர்வமான அடிப்படையை ஓட்டை என்று சொல்லும் நீங்கள், கற்கால மனிதர்களின் ஊகமாக பூமியின் வயது சில தலைமுறைகள் தான் என்றால் நம்பத் தயாராய் இருக்கிறீர்கள்.

4. உங்கள் நம்பிக்கையை அப்படியே பின்பற்றுபவர்களைத் தவிர்த்து, இந்த உலகில் உள்ள எல்லாரும், நரகத்தில் முடிவில்லாமல் தவிப்பார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்கள். இருந்தும் உங்கள் மதம் சகிப்புத் தன்மையும், அன்பும் கொண்டது என்றும் கருதுகிறீர்கள்.

3. நவீன விஞ்ஞானம், வரலாறு , புவியியல், மண்ணியல், உயிரியல் ,பெளதீகம் என்ன நிரூபணங்களைக் கொடுத்தாலும், நீங்கள் அதைப் புறந்தள்ளிவிட்டு, யாரோ ஒரு முட்டாள் உயர்ந்த குரலில் புரியாத வாசகத்தைப் பேசினால் (speaking in ‘tongues ‘ ) அது கிருஸ்துவத்தின் உண்மையை நிரூபிக்கிறது என்று நம்பத் தயாராய் இருக்கிறீர்கள்.

2. பிரார்த்தனையின் பலன் 0.01 சதவீதம் என்றாலும் நீங்கள் பிரார்த்தனையின் வெற்றியைக் கொண்டாடத் தயாராய் இருக்கிறீர்கள். மீதி 99.9 சதவீதம் பிரார்த்தனைகள் தோல்வியுறும்போது, அது கடவுளின் விருப்பம் ஆகிவிடும்.

1. பல நாத்திகர்களைவிடக்கூட உங்களுக்கு விவிலியம், கிருஸ்துவ மத வரலாறு, சிருஸ்துவ மத நிறுவனத்தின் வரலாறு பற்றிய அறிவு குறைவு தான் என்றாலும், கிருஸ்துவன் என்று தம்மை தயங்காமல் சொல்லிக்கொள்வீர்கள்.

—-

Series Navigation

வலையிலிருந்து

வலையிலிருந்து