This entry is in the series 20040805_Issue

மாலதி


—-
என் ஆடைப்பூ நூலில்
உன் உயிர் என்றாய்
மகிழ்ந்தேன்
பின்னழகில் நானே தான்
பெண் என்றாய்
கிறங்கினேன்
நான் தேவை
என் குரல் தேவை
என் இதம்தான்
முதல் இனிமை என்றாய்
உன்னைப் புரிந்து கொள்ள
முயன்றேன்.
ஆழ்ந்த விவாதத்தில்
ஒரு சகா இடைவர
எழுந்தாய்
கண்ணால் என்னை உதறினாய்
என் இருப்பையே மறந்து
விதிர் விதிர்த்து
நீ சகாவுக்குச் சலுகையாய்
எழுந்த போது
என்னை இழந்தாய்
பாவம் உனக்குத் தெரியாது
பெண்ணுக்குள் நுழையக்
கோழையால் முடியாது.
மாலதி
[வரிக்குதிரை – 1999 ]

malti74@yahoo.com

Series Navigation