This entry is in the series 20050318_Issue

சுகுமாரன்


எனது முதலாவது வார்த்தை
எந்த மொழியிலிருந்ததென்றோ
எந்த உணர்வால் கிளர்ந்ததென்றோ
எவ்வளவு குடைந்தும் நினைவில் இல்லை

இன்று எனக்கு
யோசிக்க
பரிமாற
பிழைக்க
மூன்று மொழிகள் தெரியும்
உபரியாக மெளனமும்.

எனது கடைசி வார்த்தை
எந்த மொழியிலிருக்குமென்றோ
எந்த உச்சரிப்பில் கேட்குமென்றோ
எவ்வளவு முயன்றும் தீர்மானமில்லை.

எதுவானாலும்
எனது நான்கு மொழிகளிலும் இல்லாததாக
இருக்கக் கடவது
எனது கடைசி வார்த்தை.
—-
sukumaran@SUNNETWORK.ORG

Series Navigation