ஒவ்வொரு நொடியிலும் வாழ்ந்து பழகுவோம்
Published August 21, 2008 • By
ரஜித்
ரஜித்
ஒவ்வொரு நொடியிலும் வாழ்ந்து பழகுவோம் – ரஜித்
பத்தாம் மாடி
பூத்தொட்டி
பொத்தென்று விழுந்ததில்௪
பக்கம் பார்க்காமல்
பாதை விலகியதில்௪
பச்சை மனிதனை
பார்க்குமுன் கடந்ததில்௪
ஒவ்வாமை அறியாமல்
ஊசி போட்டதில்௪
வைரஸ் ஒன்று
வயிறு புகுந்ததில்௪
முழுச்சோறொன்று
மூச்சுவழி சென்றதில்௪
மின்னலில்
மின் கம்பியில்௪
பல்லி விழுந்ததில்
பலமாய்ச் சிரித்ததில்௪
கொண்டதை விட்டதில்
கூடிக் குடித்ததில்௪
இடியில்
பூச்சி கடியில்௪
அதிர்ச்சியில்
அவமானத்தில்௪
மறுவிநாடியே
மரணம் கவ்வலாம்.
ஆதலால்
ஒவ்வொரு நொடியிலும்
வாழ்ந்து பழகுவோம்