இருக்கவே செய்கிறார் கடவுள்
பா.அ.சிவம்

கடவுளிடமிருந்து தொடங்கியதாம்
உலகம் …
எவர் கண்டார் ?
கடவுளே தனது தியானத்திலிருந்துதான்
தொடங்கியதாக கூறுகிறார்
சுவாமிஜி ஒருவர்
படைத்தவராக இருந்தாலும்
கடவுளைக் காண்பித்தவர்கள்
மனிதர்கள்தான் …
எல்லாரும் கடவுளைப்
படைக்கலாம்
கடவுளைப் படைப்பது
அரிதான ஒன்றல்ல …
கத்திரிக்காயில்
புடலங்காயில்
பப்பாளி பழத்தில் எல்லாம்
பிறக்கத் தொடங்கி விட்டார்
கடவுள் …
அவரவர் விருப்பத்திற்கேட்ப
அல்லது
வேண்டாத
பொருட்களில்
கடவுளை வடிவமைத்துக் கொள்ளலாம் …
அவற்றை விற்கலாம்
வாங்கலாம்
வாங்கி வழிபடலாம்
கடவுள்
தண்டிக்க மாட்டார்
இதற்கெல்லாம் …
தண்டிக்க வேண்டியவற்றை எல்லாம்
விட்டுத்தானே
வைத்திருக்கிறார் …
sivam_balan@yahoo.com