This entry is in the series 20080821_Issue

கே.பாலமுருகன்



அப்பா
மருத்துவமனையில் இருக்கிறார்
என்கிற செய்தியோடு
அலறிய தொலைபேசியின்
ஓசை மங்குவதற்குள்
மனைவி
மேலைநாட்டு கவுனுடன்
வந்து நிற்கிறாள்
மார்க் கச்சையின்
கயிறு தெரிய

ஆல்பத்திற்கு
புகைப்படங்கள்
தயார்
வெளிநாட்டு கவுன்களும்
தயார்

தமிழ் திருமண முறையில்
எங்கிருந்து வந்தது
கவுன் கலாச்சாரம்?
ஆல்பம் கலாச்சாரம்?

தமிழ் நாகரிகத்தைத்
தவறவிட்ட கோலத்தில்
கவுன் தரையைத்
தழுவுகிறது
மேலாடை
எங்கே நழுவுகிறது?

சரீர மேக்-ஆப்
தயாராகியும்
மனைவியுடன் ஆல்பத்திற்கு
போஸ் கொடுக்க
“நான்” மட்டும்
இன்னமும்
தயாராகவில்லை

ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா


bala_barathi@hotmail.com

Series Navigation