திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

என் காதல்

This entry is in the series 20080821_Issue

ரஜித்



உயிரெழுத்துக்கள் யாவை?
அவள் பெயரின்
மூன்றெழுத்துக்கள் மட்டும்

உயிர்வாழத் தேவை?
காதல்
காற்று
உணவு

காதலில் கண்டதென்ன?
கொடி வளர்கிறது
கொம்பு கண்டதென்ன?

காதலால் எரிவதை
நிறுத்தமாட்டாயா?
சூரியன் நிறுத்தட்டும்
பின் நான் நிறுத்துகிறேன்

அவள் ராஜ்ஜியத்தில்
நீ பூஜ்ஜியம் என்பது
எப்படிச் சரி?
சூரியனுக்கு முன்
பூஜ்ஜியமாயிருப்பது
நிலவுக்குச் சரி

ஆதாம் முதல்
அப்புச்சாமி வரை
காதல் தொடர்கிறது.
உன் காதல் மட்டும்
எப்படி உயர்வு?
என் பூவின் தேன்
எனக்கு மட்டுமே உயர்வு

காதல் விதை
முளைத்த கதை?
மழை அறிவேன்
மேகரகசியம் அறியேன்


rajid_ahamed@yahoo.com.sg

Series Navigation

About ரஜித்

ரஜித்

View all 54 articles →

என் காதல்….

This entry is in the series 20010430_Issue

பி.கே. சிவகுமார்


என் காதல்
கவிதையுடன்தான்.
வார்த்தைகளுடன் இல்லை.

என் காதல்
இசையுடன்தான்.
வாத்தியங்களுடன் இல்லை.

என் காதல்
உனக்குள் இருக்கும்
உன்னோடுதான்.
உனக்கு வெளியே இருக்கும்
உன்னோடு இல்லை.

Series Navigation

About பி.கே. சிவகுமார்

பி.கே. சிவகுமார்

View all 168 articles →