தீபாவளி
Published October 4, 2007 • By
ரஜித்
ரஜித்

காலாண்டு இருக்கும்போதே
கட்டியங்கூறும் தீபாவளி
பழையன கழிகிறது
பழங்கீற்றாய்
புதுக்குறுத்தாய் இதோ
புதுப்புது பொருட்கள்
குத்துவிளக் காகிறது
மொத்த வீடும்
அன்பு பரிமாறும்
அடுக்களைகன்
அண்டா குண்டாக்களில்
அதிரசங்கள் முறுக்குகள்
பிள்ளைகளுக் கெல்லாம்
வெள்ளிக் காசு முத்தங்கள்
மரணிக்கும்வரை சிரிக்கும்
மத்தாப்பூக்கள்
பூக்களே நாணும்
புத்தாடை பூரிப்புகள்
இரும்புத்தூளாக குடும்பங்கள்
காந்தமாக தொலைக்காட்சிகள்
படநாயகனுக்கு
பாலாபிஷேகங்கள்
எல்லாத் தீபாவளிகளும்
இப்படித்தான்
ஒரு கேள்வி
நரகாசுரர்கள் செத்துப்போனது
உண்மையா ?
rajid_ahamed@yahoo.com.sg