This entry is in the series 20090108_Issue

க.செ.வெங்கடேசன்- அபுதாபி



வெறிச்சோடி இருந்தது
வீட்டு பால்கனி,
தினமும் பார்க்கும்
ஏழெட்டு புறாக்கள்…

கேழ்வரகு போட்டும்,
காணவில்லை.
நான் வளர்க்கும் புறாக்கள்
இல்லை என்றாலும்,

ஏனோ மனம் சமாதானமில்லை,
ஏன் வரவில்லை?!

காலை ஆறு மணிக்கே,
தென் படும் புறாக்கள்
மணி ஏழு ஆகியும்
வரவேயில்லை.

என்னவாயிற்று
அதிலும் வெள்ளை புறா.
மங்கள அழகுடன்..
இனி வரவே வராதோ?..

வாழ்கையின் துக்கம்
மரணம் அல்ல.
எதிர்பார்ப்பு
தொலைக்கப்படுவதால்
ஏற்படும் வலி.


kjvenkatesan@yahoo.com

Series Navigation