This entry is in the series 20070426_Issue

முனைவர் மு.இளங்கோவன், புதுச்சேரி


இந்த ஆண்டு படிப்புதான்
இன்று நிறைவு பெற்றது!
இருபது நாள் விடுமுறை
எங்களுக்குக் கிடைத்தது.

சிறப்பு இரயிலு ஏறியே
சென்னைப் பட்டனம் போகலாம்!
சிறுவர் பூங்கா சென்றுநாம்
சிங்கம் புலியைப் பார்க்கலாம்!

கடற்கரைக்குப் போகலாம்!
கட்டுச் சோறு உண்ணலாம்!
கப்பல் நிற்கும் காட்சியைக்
கண்டு கண்டு மகிழலாம்!

மாமன் மாமி வீட்டினை
மாலைப்பொழுதில் பார்க்கலாம்!
அந்த வீட்டுத் தம்பியை
ஆசை யோடு தூக்கலாம்!


muelangovan@gmail.com

Series Navigation