முதலிடம்
பவளமணி பிரகாசம்

அவனது ஆசைகள் அறிந்த பின்னே
அவளது ரசனைகள் ஒளிந்தது பின்னே
அழும் மழலை அல்லல் தீர்த்த பின்னே
அவளுக்கு எஞ்சிய தூக்கம் என்னே
ஊரின் உறவின் தேவைகள் பலவிதம்
அவளின் அலுவல்கள் அதற்குப் பிறகே
இரண்டாவதாய் தனை நிறுத்திய பெண்ணே
முதலிடத்தை வென்றுவிட்டாய் கண்ணே
Pavalamani Pragasam
Pavalamani_pragasam@yahoo.com