“தொலையும் சொற்கள்”
கே.பாலமுருகன்

அவர்கள்
என்னிடம்
பேசிய சொற்கள்
அவ்வளவாக
நினைவிலில்லை
சொற்களைத் தொலைக்கும்
அசடாக
வழிந்து கொண்டிருக்கிறேன்
நேற்று பேசியவை
இன்று பேசிக் கொண்டிருப்பவை
என்று
மொத்தமாகச்
சொற்கள்கூட்டம்
எப்பொழுதும்
என்னிடமிருந்து
அகன்று கொண்டிருக்கின்றன
என் வீட்டிலிருக்கும்
பூனையைப் போன்ற
சூன்யம்
எப்பொழுதும்
என் சொற்களின்
மீது
படிந்திருக்கின்றது
கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.com
bala_barathi@hotmail.com