This entry is in the series 20080814_Issue

கே. ஆர். மணி


அந்தவார்த்தை தொலைந்துபோனது.

தேடிக்கொண்டே போனதில்
ஓற்றையடிப்பாதை முடிவுற்றது.
வண்ணத்துப்பூச்சி உட்கார நினைத்த
கடைசியிலை உதிர்ந்துபோனது
மெல்ல வண்ணத்து பூச்சியும்.
காற்றின் கடைசி மூச்சு நின்று போனது.
நீர் ஆவியாகி போனமணித்துளியில்
கரைந்ததுதான் காலத்துளியின் இறுதிச்சொட்டு.

எதுவுமற்ற வெளியில்
மற்றவார்த்தைகள் கிடைத்தாலும்
அதைப்போல இல்லை.
எனக்கு அதுதான் வேண்டும்.

சடக்கென ஒரு தடக்கலில் அது
திரும்ப கிடைத்தது.
ச்சை.. திரும்பவும் உருவாக்கவேண்டும்.
இந்த பிரபஞ்சத்தை


mani@techopt.com

Series Navigation